புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (18:03 IST)

இந்தியர்கள் உக்ரைனில் இருந்து திரும்பி வர ஏர் இந்தியா ஏற்பாடு!

பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களை இயக்க ஏர் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. 

 
உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
 
இந்நிலையில் பல்வேறு விமானங்களில் உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அவசரமாக நாடு திரும்பி வருகின்றனர். கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் இந்தியாவில் முழுவதுமாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைனிலிருந்து வெளியேறும் இந்தியர்கள் இந்தியா வருவதற்காக விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
 
இதனிடையே பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களை இயக்க ஏர் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப ஏதுவாக விமானங்களை இயக்க ஏர் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.