1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (08:25 IST)

கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிப்பு: போலீஸ் வளையத்தில் டெல்லி!!

டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

 
புதிய வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வரும் நிலையில் இன்று உச்ச கட்டமாக டிராக்டர் பேரணியை நடத்தினார்கள் என்பதும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் விவசாயிகள் ஒரு சிலர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடியடியால் அமைதி போராட்டம் கலவரமாக மாறியது. வன்முறையில் 86 காவல்துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும், டெல்லியில் விவசாயிகள் பேரணி வன்முறையில் முடிவடைந்த நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.