வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2016 (12:31 IST)

தோனி பல பெண்களை காதலித்தார்: முகத்திரையை கிழிக்கும் ராய் லட்சுமி!

தோனி பல பெண்களை காதலித்தார்: முகத்திரையை கிழிக்கும் ராய் லட்சுமி!

இந்திய அணியின் கேப்டன் தோனிக்கும் எனக்கும் ஒத்துவராததால் பிரிந்து விட்டோம். அதற்கு பின்னர் அவர் பல பெண்களை காதலித்துள்ளார் என நடிகை ராய் லட்சுமி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 
 
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி என்ற படம் நாளை வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த படம்.
 
தோனியும், ராய் லட்சுமியும் காதலித்ததாக தோனிக்கு திருமணமாகும் முன்னர் கிசுகிசுக்கப்பட்டது. இந்த காதல் தற்போது வெளியாக உள்ள படத்தில் உள்ளதா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
 
இந்நிலையில் இந்த யூகங்களை நடிகை ராய் லட்சுமி மறுத்துள்ளார். இது குறித்து கூறிய அவர் என்னைப்பற்றி இந்த படத்தில் உள்ளதா என்பது தெரியாது. ஆனால் தற்போது தோனிக்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார், அவருக்கும் எனக்கும் இடையே தற்போது எந்த தொடர்பும் இல்லை.
 
2008-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் தூதுவராக நான் இருந்த போது தோனியும் நானும் டேட்டிங் சென்றோம். பின்னர் இருவருக்கும் ஒத்துவராது என்பதால் பிரிந்து விட்டோம். அதற்கு பின்னர் தோனி பல பெண்களை காதலித்துள்ளார். இது வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இது பெண்கள் உறவையும் தாண்டியது என்றார்.