ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பா? அட்டர்னி ஜெனரல் தகவல்ல்
பல்வேறு ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் தேதி இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இந்த காலக்கெடுவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலையில் அந்த ஆதார் எண்ணை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு உள்பட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும், அதற்கு மார்ச் 31ஆம் தேதியே கடைசி தேதி என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது
இந்த நிலையில் , ''ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் நீட்டிக்க அரசு தயாராக உள்ளது. வழக்கின் விசாரணையைப் பொறுத்து அரசு முடிவு செய்யும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அவர்கள் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் விசார்ணையின்போது தெரிவித்தார். இதன் மூலம் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்றும் இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது