1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜூன் 2018 (09:34 IST)

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பெண் கைது

விஜயவாடாவில் பெண் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. வடநாட்டில் ஆசிரியர் ஒருவர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், அதனைத்தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் டியூசனுக்கு சென்ற மாணவனை ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் விஜயவாடாவை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், எதிர் வீட்டில் வசித்து வந்த 14 வயது சிறுவனை அடிக்கடி அழைத்து அவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொல்லக்கூடாது எனவும், தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
 
இந்த விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் அதிர்ந்துபோய் பின் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அந்த பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.