செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (10:48 IST)

28 வயது மருமகளை மனைவியாக்கி கொண்ட 70 வயது மாமனார்! – உ.பியில் விநோதம்!

உத்தர பிரதேசத்தில் மகன் உயிரிழந்து விட்டதால் மருமகளை மாமனாரே மறுமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நாள்தோறும் விதம் விதமான நூதன திருமணங்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தில் மருமகளையே மனைவியாக்கிய மாமனார் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான கைலாஷ் யாதவ். 70 வயதான இவருக்கு திருமணமாகி 4 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது. கைலாஷ் யாதவ்வின் மனைவி இறந்தபிறகு அவர் தனியே வாழ்ந்து வந்துள்ளார்.


இந்நிலையில் கைலாஷ் யாதவ்வின் மூன்றாவது மகன் சில ஆண்டுகள் முன்னதாக உயிரிழந்தார். இதனால் தனியே இருந்து வந்த மருமகள் பூஜாவை மறுமணம் செய்து கொள்வதென கைலாஷ் யாதவ் முடிவு செய்துள்ளார். அதற்கு பூஜாவும் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. இந்த தகவல் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்திற்கும் தெரிய வந்துள்ளது. எனினும் அவர்கள் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் திருமணம் செய்திருக்கும் பட்சத்தில் அதை விசாரிக்க முடியாது என்றும், விருப்பமில்லாமல் திருமணம் நடந்ததாக புகார் வந்தால் விசாரிக்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் சம்பிரதாயங்களை மீறி உள்ளதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

Edit by Prasanth.K