1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (07:59 IST)

போலீஸ் கைது செய்த 10 பேர்களில் 5 பேர்களுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

போலீஸ் கைது செய்த 10 பேர்களில் 5 பேர்களுக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா என்ற பகுதியில் ஊரடங்கு நேரத்தில் திடீரென 10 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை அடுத்து அவர்கள் போலீசார்களை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து 10 பேர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த பத்து பேர்களுக்கும் கொரோனா அறிகுறி இருந்ததாகத் தெரிகிறது. 
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 10 பேர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 5 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் 10 பேர்களை கைது செய்த போலீசார் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் செய்தவர்களை கைது செய்து சிறைக்கு அழைத்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட காவல்நிலையம் தற்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும், அந்த காவல்நிலையில் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், இதனையடுத்து அருகில் உள்ள கட்டிடத்தில் காவல்நிலையம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது