1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2016 (16:11 IST)

ரூ.5.7 கோடி பாத்ரூமில் பதுக்கிய ரிசர்வ் வங்கி அதிகாரி கைது

பெங்களூரில் ரூ.5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை குளியலறையில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த ரிசர்வ் வங்கி அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 



 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு விதிமுறைகளை விதித்தது. இருந்தும் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தது. 
 
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கருப்பு பணம் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடி கணக்கில் சிக்கியுள்ளது.
 
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குளியலறைக்குள் உள்ள ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது.
 
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் என்பவரை இன்று பெங்களூரில் கைது செய்தனர்.