மருமகளுக்காக தோலை தானம் செய்த மாமனார்

Webdunia|
64 சதவிகித தீக்காயங்களுடன் அவர் அகமதாபாத்தில் உள்ள வி.எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உயிர் பிழைக்கவேண்டுமானால் அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மோனிகாவின் உடலில் பெரும்பாலான இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், அவரது உடலில் இருந்து தோலை எடுத்து தோல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது இயலாத காரியமாக இருந்தது.

இந்நிலையில், மருமகளின் உயிரை காப்பாற்ற மோனிகாவின் மாமனார்
ஹிம்மத்சின் ரதோட் தனது தோலை தானமாகத் தர முன்வந்தார்.
இவரது செயலை பாராட்டிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவையான தோலை ஹிம்மத்சின்னின் தொடையிலிருந்து எடுத்துக்கொண்டனர்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஆபத்திலிருந்து மீண்டு உடல்நலம் பெற்றுவரும் மோனிகா, தான் பெரிய துன்பத்தை அனுபவிக்க நேரிட்டபோதிலும் தனக்கு இத்தகைய மாமனார் கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தெரிவித்த வி.எஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர், தனது அனுபவத்தில் எத்தனையோ அறுவை சிகிச்சைகளைத் செய்திருந்தபோதிலும், மாமனார் மருமகளுக்காக தனது தோலை தானம் செய்து சிகிச்சைக்கு உட்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று கூறியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :