திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (23:32 IST)

'செம போத ஆகாதே: திரைவிமர்சனம்

இளம் ஹீரோக்கள் பலர் தயாரிப்பாளர்களாகவும் மாறி வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளவர் அதர்வா. இவர் தயாரித்து நடித்த 'செம போத ஆகாதே' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
சென்னையின் தனி பிளாட் ஒன்றில் தங்கியிருக்கும் அதர்வாவை அவரது நண்பர் கருணாகரன் உசுப்பேற்றியதால் விபச்சாரி பெண் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவருடன் அதர்வா முக்கியமான வேலையை ஆரம்பிக்கும்போது நந்திபோல் குறுக்கிடும் பக்கத்து பிளாட் தேவதர்ஷினி தன்னுடைய மாமனாருக்கு ஹார்ட் அட்டாக், எனவே வந்து உதவி செய் என்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பும் அதர்வா, அந்த விபச்சாரி பெண் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். அதன்பின் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்கள், அந்த கொலையை செய்தது யார்? என்பதை அதர்வா கண்டுபிடிக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை
 
காதல், காமெடி, ஆக்சன், என மூன்றிலும் ஸ்கோர் செய்துள்ளார் அதர்வா. குறிப்பாக சண்டைக்காட்சியில் அனல் பறக்கின்றது. தனது சொந்த படம் என்பதால் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அதர்வா
 
டாக்டராக வரும் நாயகி மிஷ்திக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் கிடைத்த வாய்ப்பில் புகுந்து விளையாடியுள்ளார். குறிப்பாக தூங்கும்போது அவர் செய்யும் ஒரு செயல் இளைஞர்களுக்கு சரியான விருந்து
 
விபச்சாரியாக நடித்துள்ள அனைகா சோட்டி, பெரும்பாலும் பிணமாக வருவதால் வேலை குறைவு. ஆனால் முதல் பத்து நிமிட கலகலப்புக்கு இவர்தான் காரணம்
 
கருணாகரன் இந்த படத்தில் காமெடியனா? அல்லது இரண்டாவது ஹீரோவா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு அவருடைய நடிப்பும் டைமிங் காமெடியும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்
 
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை வழக்கம்போல் படத்தின் விறுவிறுப்புக்கு கைகொடுக்கின்றது. 'செம போத ஆகாதே' பாடல் இன்னும் சில நாட்களுக்கு ஹிட்டாக இருக்கும்
 
ஒரு விபச்சாரியின் கொலை, அந்த கொலைக்கு பின் இருக்கும் சதி, பழிவாங்கல் என திரைக்கதையை தொய்வில்லாமல் அமைத்துள்ளார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். ஒரு காமெடி படத்தில் எந்த அளவுக்கு ஆக்சனை கலக்க வேண்டும் என்ற விகிதத்தை சரியாக புரிந்து கொண்டுள்ளதால் இந்த படம் சக்சஸ் ஆகிறது. ஆங்காங்கே வரும் டுவிஸ்ட், படம் முழுவதும் காமெடி திரைக்கதை என இயக்குனர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
 
மொத்தத்தில் செம கலக்கலான ஒரு காமெடி படம் தான் 'செம போத ஆகாதே
 
ரேட்டிங்: 3.5/5