1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (08:59 IST)

சென்னையில் பலத்த காற்றுடன் மழை: மரம் முறிந்து விழுந்ததால் கார்கள் சேதம்..!

சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று முதல் திடீரென வானிலை மாறி குளிர்ந்த தட்பவெப்பம் உள்ளது என்பதும் நேற்று மாலை திடீரென சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டல் வாகன ரத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அங்கிருந்த பழமை வாய்ந்த ராட்சச மரம் முறிந்து விழுந்ததால் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் மரங்களை வெட்டி கார்களை மீட்டனர். 
 
அதேபோல் எழும்பூரில் தகரம் சரிந்ததை அடுத்து ஆட்டோ ஒன்று சேதம் அடைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 
 
சென்னையில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva