பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. தேர்தல் வரை இப்படித்தான் இருக்குமா?
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கமின்றி இருந்து வரும் நிலையில் இன்றும் மிகவும் குறைவான சரிவுடன் தான் பங்குச்சந்தை வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 50 புள்ளிகள் மட்டுமே சரிந்து 73,826 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 30 புள்ளிகள் மட்டுமே குறைந்து 22,400 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பெரிய அளவில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் இந்த நேரத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ் , கோல்ட் பீஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை ஏற்றத்திலும் சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய பங்குகள் சரிவிலும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva