புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:54 IST)

பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி வர்த்தகமாகும் பங்குச்சந்தை.. என்ன காரணம்?

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமின்றி வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலையில் பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஒன்று பயங்கர ஏற்றத்தில் இருக்கும் அல்லது பயங்கர வீழ்ச்சியில் இருக்கும்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக பங்குச்சந்தையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் ஆகி வருகிறது. அந்த வகையில் இன்றும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி பெரிய அளவில் ஏற்றம், இறக்கம் இல்லை.

 மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் ஒன்பது புள்ளிகள் மட்டுமே இறங்கி 65 ஆயிரத்து 958 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 19,820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நூற்றுக்கணக்கில் புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிப்டி மற்றும் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமின்றி இருப்பதற்கு ஐந்து மாநில தேர்தல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.


Edited by Siva