வாரத்தின் முதல் நாளே அபாரம்.. 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்!
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் சரிவிலிருந்த நிலையில் 60 ஆயிரத்துக்கும் குறைவாக கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.
இதனால் முதலீட்டாளர்கள் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகள் உயர்ந்து 60150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 17956 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.எனவே பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva