நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் விவரங்கள்..!
நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் உயர்ந்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்த நிலையில், இன்று சிறிய அளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இன்றைய பங்குச்சந்தை இன்னும் சில மணி நேரங்களில் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது மிகவும் குறைந்த அளவில் தான் சரிந்தது. ஆனால், சென்செக்ஸ் குறைந்திருந்தாலும், நிப்டி உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 62 புள்ளிகள் குறைந்து 78,488 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே நேரத்தில், தேசிய பங்குச்சந்தை நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 23,773 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், அப்போலோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில், டிசிஎஸ், ஹீரோ மோட்டார்ஸ், சிப்லா, கோடக் மகேந்திரா வங்கி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் வங்கி, மாருதி, ஐடிசி, சன் பார்மா, பிரிட்டானியா, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் புதிய பங்குகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva