1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 ஜனவரி 2025 (10:52 IST)

நேற்றைய பெரும் சரிவுக்கு பின் இன்று உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

share
இந்திய பங்குச்சந்தை நேற்று பெரும் சர்வை சந்தித்த நிலையில் இன்று ஓரளவு பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு திருப்தியை அளித்துள்ளது. 
 
நேற்று மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடங்கியது முதலில் ஏற்றத்தில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 682 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போன்று, தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 19 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகின்றன. 
 
விப்ரோ, சிப்லா, ஐடிசி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டைட்டான், பிரிட்டானியா, டெக் மகேந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிடல் ஆகிய பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva