திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:22 IST)

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்றைய நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
பங்குச் சந்தை நேற்று மிக மோசமாக சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இன்றும் பங்குச் சந்தை சரிந்ததாகவும், ஆனால் இன்று குறைந்த அளவில் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

நேற்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சுமார் 1200 புள்ளிகள் வரை சரிந்து, அதன்பின் வர்த்தக முடிவில் 900க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்தது. இந்த நிலையில், இன்று மும்பை பங்குச் சந்தை 78 புள்ளிகள் மட்டும் சரிந்து 78673 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல, தேசிய பங்குச் சந்தை வெறும் 22 புள்ளிகள் மட்டும் சரிந்து 23,970 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று அளவுக்கு இன்று குறையவில்லை என்றாலும், இன்றும் பங்குச் சந்தை சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும், ஹெச்சிஎல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் அதிகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva