இரண்டாவது நாளாக தொடர் சரிவில் சென்செக்ஸ்! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
வாரத்தின் முதல் நாளான நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சென்செக்ஸ் சரிந்துள்ளது
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 270 புள்ளிகள் சரிந்து 5770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 155 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச் சந்தை ஏற்றம் அடையும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்
Edited by Mahendran