பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. மீண்டும் 63,000ஐ கடந்த சென்செக்ஸ்..!
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று பங்குச்சந்தை 63 ஆயிரத்திற்கும் குறைந்த நிலையில் இன்று மீண்டும் 63 ஆயிரத்தை சென்செக்ஸ் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 32 புள்ளிகள் அதிகரித்து 18,72 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இடைப்பட்ட காலத்தில் ஏற்ற இறக்கத்தடன் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தை கொடுக்கும் ஒரு முதலீடு என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva