நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருவதால், முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை சற்று உயர்ந்தாலும் மதியத்திற்கு மேல் என்ன நடக்கும் என்று தெரியாததால், முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து குறைந்த அளவில் உயர்ந்து வருகிறது. சற்றுமுன் 170 புள்ளிகள் உயர்ந்து 74,625 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் ஒன்பது புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 22,560 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ் இன்ட் வங்கி, மாருதி, டைட்டான், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, ஆசியன் பெயிண்ட், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே போல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, அப்பல்லோ ஹாஸ்பிடல், ஸ்டேட் வங்கி, சிப்லா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், விப்ரோ, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva