வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By VM
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (11:32 IST)

சோபாவை திருமணம் செய்தாரா எடியூரப்பா... பத்திரிக்கை தகவலால் பரபரப்பு

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது எம்பியாக இருந்த சோபா சுரந்தலாஜேவை திருமணம் செய்து கொண்டதாகவும், இதனை  எடியூரப்பா தனது டைரியில் குறிப்பிட்டுள்ளதாகவும் தி கேரவன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சமீபத்தில் தி கேரவன் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய டைரியில், எடியூரப்பா தனது கைப்பட எழுதிய சில தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது. 
 
அதில் எடியூரப்பா தான் முதல்வராக சம்பாதித்த பணத்தில் ரூபாய் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பாஜக மேல்மட்ட தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இறை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் இது பொய்யான திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். 
 
இதற்கிடையே தி கேரவன் பத்திரிகை வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், பாஜக எம்பி சோபா சுரந்தாலோ ஜேவை கேரள மாநிலத்திலுள்ள பகவதி அம்மன் கோயிலில் இந்து முறைப்படி எடியூர் சித்தலிங்கேசுவரசுவாமி பெயரில் தான் திருமணம் செய்து கொண்டதாக எடியூரப்பா தனது டைரியில் எழுதியிருந்ததாக  கூறப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பாக எடியூரப்பா மற்றும் சோபா இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருப்பதாகவும் தி கேரவன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.