வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (11:53 IST)

என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா ? – இடதுசாரிகளை வம்பிழுக்கும் தமிழக பாஜக !

தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை கார்ட்டூன் போட்டு கேலி செய்து வருகிறது.

அரசியல் கட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களிலும் தங்கள் கட்சி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொருக் கட்சியிலும் இணையதள அணி என்ற தனி குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் தங்கள் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜகவின் இணைய அணி தொடர்ந்து கார்ட்டூன் படங்களைப் போட்டு எதிரணியினரைக் கலாய்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருமா வளவன், ஸ்டாலின் போன்றோரைக் கேலி செய்த பாஜக இன்று கம்யூனிஸ்ட் கட்சியினரை வம்புக்கு இழுத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் காங்கிரஸைத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. இது சம்மந்தமாக இரண்டுக் கட்சிகளை சேர்ந்தவர்களும் அது மாநிலக் கொள்கை சார்ந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

இதை வைத்து கார்ட்டூன் வெளியிட்டுள்ள பாஜக் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஓட்டு போடு என்று கூறுவது போலவும் கேரளாவில் காங்கிரஸுக்கு ஓட்டு போடாத என சொல்வது போலவும் அதனால் வாக்காளர்கல் குழம்புவது போலவும் சித்தரித்துள்ளது.