வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (07:21 IST)

பாஜகவில் சேருகிறாரா சிவகார்த்திகேயன்? அதிர்ச்சி தகவல்

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து முக்கிய பிரமுகர்களை கட்சியில் இணைப்பதில் தீவிரமாக உள்ளார் குறிப்பாக இவர் தலைமை ஏற்ற பின்னர் பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையிலும் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனை பாஜகவில் இழுக்க பெரும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் இதற்காக மிகப்பெரிய தொகை ஒன்று பேரம் பேசப்பட்டு உள்ளதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன 
 
சிவகார்த்திகேயன் சமீபத்தில் சொந்தப்படம் எடுத்து பெரும் நஷ்டத்தில் இருப்பதால் அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக பாஜகவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு அந்த கட்சியில் சேர முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த வதந்தி பரவி வருகிறது
 
ஆனால் இது குறித்து சிவகார்த்திகேயன் வட்டாரத்தில் விசாரித்தபோது இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இந்த செய்தியில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் விளக்கமளித்தனர். சிவகார்த்திகேயன் பாஜகவில் சேருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்