மார்ச் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணமா?
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது வரும் மார்ச் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
கடந்த 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது
இதிலிருந்து இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளிநாடு உள்பட பல இடங்களுக்கு சென்று வருவதாகவும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது
இந்த நிலையில் ஏற்கனவே இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் அந்த திருமணத்தை இருவரும் மறுத்து வருவதாகவும் கூட ஒரு வதந்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இந்த திருமண தேதியை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது