1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2017 (12:57 IST)

ஆம்பள நடிகைகள் பட்டியலில் இணைந்த நடிகை

நாட்டாமை நடிகரின் மகள், உலகநாயகனின் மூத்த மகள், உச்ச நட்சத்திர நடிகருக்கு மகளாக மூன்றெழுத்து படத்தில் நடித்த நடிகை… இவர்களுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப்பெயர் உண்டு. ‘ஆம்பள நடிகைகள்’ என்பது அந்தப் பெயர். அதாவது, பெண்ணுக்குரிய நளினங்கள் இல்லாமல், ஆண்களைப் போல நடந்து கொள்பவர்கள்.
 

 

அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார், மும்பையைச் சேர்ந்த அந்த நடிகை. நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான இவர், குத்துச்சண்டை பற்றிய படத்தில் அறிமுகமானார். படமும் சூப்பர் ஹிட்டாக, அவருடைய நடிப்பும் எல்லோருக்கும் பிடித்துப் போனது.

இதனால், அடுத்தடுத்து பல படங்களில் புக் ஆனார். ஆனால், பர்பாமென்ஸ் நடிகருக்கு ஜோடியாக நடித்த படத்திலும், டான்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படத்திலும், அவரைப் பார்க்கும்போது பெண் போலவே தெரியவில்லை என்கிறார்கள். குத்துச்சண்டை படத்தில் பெரும்பாலும் பேண்ட், சட்டை என்பதால், அந்தப் படத்தில் பார்ப்பதற்கு அழகாகக் தெரிந்தாராம். ஆனால், அதற்குப் பிறகு சுடிதார், சேலை கட்டி நடித்ததைப் பார்க்கும்போது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். அதிலும், மாடர்ன் டிரெஸ்ஸில் அவரைப் பார்க்க சகிக்கவில்லை என்கிறார்கள்.