1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 28 மே 2017 (20:52 IST)

ஜெயலலிதா எச்சரித்தும் அடங்க மறுக்கும் அஜித்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் முடிந்தது. 'விவேகம்' படக்குழுவினர் தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் தீவிரமாக இருந்தாலும் அஜித், கடைசியாகத்தான் டப்பிங் செய்ய உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.


 


ஏனெனில் பல்கேரியா படப்பிடிப்பின் கடைசி நாளில் ஒரு ரிஸ்கான சண்டைக்காட்சியில் நடித்தபோது அஜித்துக்கு கையில் அடிபட்டுள்ளதாகவும், அந்த காட்சியை டூப் வைத்து இயக்கலாம் என இயக்குனர் சிவா கூறியும், ரிஸ்க் குறித்து கவலைப்படாமல் அஜித் நடித்ததால் அடிபட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் மீது அதிக அன்பு வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் டூப் வைத்து நடிக்க வேண்டும் என்று அன்பாக எச்சரித்தும், அஜித் தொடர்ந்து டூப் இன்றி நடித்து காயம் அடைந்து வருகிறார். தற்போது ஏற்பட்டுள்ள காயம் ஆற இன்னும் ஒருசில நாட்கள் ஆகும் என்பதால் அஜித் டப்பிங் செய்ய சில நாட்கள் ஆகும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.