1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By VM
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (13:00 IST)

உச்ச நட்சத்திரங்கள் இருவருக்கும் இடையே சண்டையா!

சும்மா இருந்தாலும் வம்பு இழுப்பாங்கன்னு சும்மாவா சொன்னாங்க...செவனேனும் நடித்து வரும் இரு உச்ச நட்சத்திரங்கள் இடையே சண்டைன்னு சிலர் கொளுத்தி போட்டதுல்ல கோலிவுட்டே பரபரப்பா மாறிபோச்சு...
ஆளப்போற நடிகருக்கும், விவசாயிகளை வாழ வைத்த நடிகருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக சிலர் கோலிவுட்டில் புகையவிட்டனர். அதனால் தான் ஆளப்போற நடிகரின் படத்தோடு, வாழ வைத்த நடிகர் ரிலீஸ் செய்கிறார் என கோலிவுட்டில் கிசுகிசுத்தனர்.
 
மேலும் இந்த சண்டை இப்ப, நேத்து இல்ல... அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து நடிச்ச நட்பான படத்தில இருந்தே இருக்குன்னு வதந்தியாக  பரப்பிட்டாங்க.
 
இது என்னடா புதுசாக இருக்கேன்னு விசாரிச்சா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. வெறும் கட்டுக்கதைன்னு சொல்லி கட் பண்ணிட்டாங்க.. இருவரும் நட்பாத்தான் இருக்காங்க... இருவரின் வளர்ச்சிய பார்த்து பொறமைப்பட்டு யாரோ வேண்டாதவங்க, விஷமத்த கிளப்பிட்டமாதிரி இருக்கு... இந்த விஷயம்னு  பேசிக்கிறாரங்க...