சமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...
சமீபத்தில் திருமணமாகியுள்ள சமத்து நடிகை, இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளாராம்.
திருமணம் ஆகிவிட்டாலே நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார் சமத்து நடிகை. அதுவும் திருமணம் முடிந்த இரண்டொரு நாளிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அதுமட்டுமல்ல, தன் முதலிரவு போட்டோவைக்கூட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால், கணவர் வீட்டில் பெரிய பஞ்சாயத்தே நடந்ததாம். அதில், படத்தில் நடிக்கக் கூடாது என்று கூட சொன்னார்களாம். ஆனால், இனிமேல் அப்படியெல்லாம் போட்டோ போட மாட்டேன் என்று உறுதி அளித்ததுடன், கிளாமராக நடிக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம் சமத்து நடிகை.