1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (10:41 IST)

Disappearing Messages-ல் வாட்ஸ் ஆப் அசத்தல் அப்டேட்!!

வாட்ஸ் அப்பில் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் என புதிய அப்டேட் சேர்க்கப்பட்டு. இது குறித்த விவரம் பின்வருமாறு...

 
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது பயனர்கள் அனைத்து தகவல்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் அழிந்துவிடும் படி தேர்வு செய்யும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.  
 
இதற்கான காலக்கெடு 24 மணி நேரம் அல்லது 7 நாட்கள், 90 நாட்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் விரும்பும் காலக்கெடுவை தேர்வு செய்ய முடியும். குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அவற்றை மறைந்து போக செய்யும் அம்சத்திற்கு தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த அப்டேட் குரூப் சாட் மற்றும் பர்சனல் சாட் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. இனி அப்படி இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் தகவல்கள் அழிந்துவிடும்படி காலக்கெடுவை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.