புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (09:34 IST)

130 ரூபாய்க்கு 200 சேனல்கள் கட்டாயம்! – ட்ராய் புதிய அறிவிப்பு!

ஒவ்வொரு சேனலுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதொரு திட்டத்தை ட்ராய் அறிவித்துள்ளது.

முன்னதாக டிடிஹெச் மற்றும் கேபிள் டிவிக்களில் சேனல்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலையே ரீசார்ஜ் விலையாக இருந்து வந்தது. டிடிஎச் சேவை நிறுவனங்கள் ஸ்போர்ட்ஸ், மூவிஸ், கிட்ஸ் என தனியாக பிரத்யேக பேக்குகளை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் ட்ராய் புதிய அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி சேவை கட்டணம் 130 ரூபாய் பெறும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவிக்கள் 100 சேனல்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும். அது தவிர்த்து ஒவ்வொரு சேனலுக்கும் எவ்வளவு கட்டணம் என்பதை அந்தந்த சேனல்களே அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி சமீப காலமாக தேவையான சேனல்களுக்கு 130 ரூபாய் மட்டுமல்லாமல் கூடுதலாகவே பணம் செலுத்தி வருகின்றனர் மக்கள்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் முதல் புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது ட்ராய். அதன்படி வரிகள் உட்பட 130 ரூபாய்க்கு 200 சேனல்கள் வாடிக்கையாளர்களுக்கு டிடிஎச் மற்றும் கேபிள் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக சேனல்களுக்காக பணம் செலுத்துவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.