1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (18:33 IST)

லிங்க்டு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட்

தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


 

 
26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்க்டு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும்.
 
உலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்டு இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம் கொண்டு மைக்ரோசாப்ட் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என்று கருதப்படுகிறது.
 
லிங்க்டு இன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது.
லிங்க்டு இன் இப்போது இருப்பதை போல அதனுடைய தனித்துவ அடையாளம், பண்பாடு மற்றும் சுதந்திரத்தை கொண்டு செயல்படும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.