1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (21:34 IST)

ஐபோன் 7 பற்றிய தகவல் வீடியோ வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப்பின் வீடியோ ஒன்று யூடிப் தளத்தில் வெளியாகியுள்ளது. 


 

 
அந்த வீடியோவில் ஐபோன் 7 பிளஸில் இரண்டு கேமராக்கள் உள்ளது. அதோடு புதிய கேமரா அக்சஸரிசகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட 6 எஸ் பிளஸ் போலவே காணப்பட்டாலும் சில விஷயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால், ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஹெட்போன் ஜாக் இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்மார்ட் கனெக்டர் ஆகியவை வசதிகள் ஐபோன் 7ல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக புளூ மற்றும் பர்புல் நிறங்களை மிக்ஸ் செய்த ஒரு கலரில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.