1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (12:35 IST)

ஜியோ 5ஜி எப்படி ஆக்டிவேட் செய்வது??

ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்…


இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.

இதன்பின்னர் இந்தியாவின் 4 நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5ஜி பீட்டா சேவைகள் தொடங்கப்பட்டன. 1 GBPS வேகத்தில் வழங்கப்படும் இந்த சேவைக்கு 5ஜி சிம்கார்டுகள் தேவையில்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்…
  1. ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
  2. அடுத்து மொபைல் நெட்வொர்க் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
  3. ஜியோ சிம் ஆப்ஷனில் பிரெஃபர்டு நெட்வொர்க் டைப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
  4. 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்களில் 5ஜி-யை தேர்வு செய்யவும்
  5. பின்னர் ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும்.
Edited by: Sugapriya Prakash