வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (10:41 IST)

ஒரே நேரத்தில் 60 டிவைஸ்களை இணைக்கலாம்! – ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்!

குறைவான இணைய கட்டணத்தில் ஒரே சமயத்தில் 60 டிவைஸ்களை இணைக்கும் சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Airtel

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் பலரும் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருவதால் இணைய சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு ஆஃபர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ப்ராட்பேண்ட் வசதியில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 60 டிவைஸ்களை ஒரே சமயத்தில் கனெக்ட் செய்யும் ரௌட்டர்க்கு மாத கட்டணம் ரூ.3999 என்று கூறியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த ரௌட்டர் மூலமாக லேப்டாப், டேப்லட், மொபைல், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் இணைய வசதி வழங்கமுடியும் என்பதுடன், 1ஜிபி வேகத்தில் இணைய சேவை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.