ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (18:15 IST)

ஏர்செல் திவால்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்த நிலையில், இந்த மனுவை தேசிய தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
ஏறக்குறைய ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15,000 கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35,000 கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறதாம். 
 
ஏர்செல் திவால் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை ஏர்செல் நிறுவனர், இயக்குனர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அனுமதியின்றி நிறுவனத்தை விட்டு வெளியேற கூடாது.
 
அடுத்து ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து மற்றும் பங்குகளை கையகப்படுத்தி விற்றோ அல்லது ஏலத்தில் விட்டோ, ஓரளவுக்கு கடனை அடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.