1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (00:10 IST)

உலர் திராட்சை சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்...?

மலசிக்கல் பிரச்சினையால் அவதிப்படும் முதியோர்களுக்கு இந்த உலர் திராட்சையானது மிகவும் சிறந்த ஓர் மருந்தாக பயன்படுகிறது. தினமும் இதனை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும்.
 
உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கவும் திராட்சை உதவுகிறது.
 
உலர் திராட்சையில் தாமிர சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சுவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜைகள் வலுப்பெறும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும்.
 
கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாய் மூலமாகத்தான் கிடைக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் பாலில் உலர் திராட்சை  சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வரும்போது எந்தவொரு குறையில்லாமல் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
 
தினமும் படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 5 காய்ந்த திராட்சையை பாலில் போட்டு காய்ச்சியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால்  சுகமான தூக்கம் வரும்.
 
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்க்கொண்டால் இரத்தசோகை குணமடையும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள்  ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
 
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடையும். இதனை வெறுமனாகவும் சாப்பிடலாம்.