செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:40 IST)

Turmeric Milk - மருத்துவமும் மகத்துவம்...!!

ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் மஞ்சள் பால் தயார். இதனை தினமும் ஒரு நேரம் மட்டுமே குடிக்க  வேண்டும். 
 
மஞ்சள் சேர்த்த பிறகு பாலை சூடேற்ற கூடாது. முன்னதாகவே பாலை சூடாக்கி வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்க்க வேண்டும்.
 
அதிக கொழுப்பு பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாருக்கும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வயிற்றைச் சுற்றி  கொழுப்பு அதிகமாக சேர்வதால் தன இது ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உடல் எடையைக் குறைப்பது தவிர வேறு வழியில்லை. மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து இதற்கு நல்ல தீர்வாக அமைந்திடும்.
 
மஞ்சளை உணவுகளில் சேர்ப்பதால் அது நம் உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவினை சேர்க்க விடாமல் செய்யும். இதனால் நாம் அதிக கொழுப்பு உணவினை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடிகிறது. 
 
மஞ்சள் பால் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் தாக்கியிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக போராடும்.  குறிப்பாக சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதனை போக்க மஞ்சள் பால் குடிக்கலாம்.
 
காய்ச்சல், தலைவலி மற்றும் மூக்கடைப்புக்கு மஞ்சள் பால் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதோடு தொண்டை வறட்சிக்கு மஞ்சள் பால் உடனடி நிவாரணம்  வழங்கிடும். நீண்ட நாட்களாக நெஞ்சில் சளிக்கட்டியிருக்கும் அதனை நீக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது.
 
சருமத்தில் ஏதேனும் அலர்ஜியோ அல்லது அரிப்பு ஏற்பட்டிருந்தால் மஞ்சள் பால் அதனையும் தீர்த்து வைக்கிறது. மஞ்சள் பால் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான காட்டன் துணியெடுத்து அதில் முக்கி அலர்ஜி ஆன இடத்தில் துடைத்தெடுங்கள். அதோடு இவை முகத்தில் தோன்றும் கரும்புகள்ளிகள்,  பருக்களையும் போக்க உதவுகிறது.
 
சில நேரங்களில் நம்மை தாக்கும் வைரஸ்கள் முதலில் தாக்குவது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியாகத்தான் இருக்கிறது. மஞ்சள் பால் நம் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து குடித்து வந்தால் வைரஸ் பாதிப்பிலிருந்து முன்னரே தப்பிக்கலாம்.