1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்!

உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை  ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

 
* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.  இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத்  தடுக்கலாம்.
 
* சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும். 
 
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்  வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும். 
 
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள்  குணமாகும்.
 
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 
* சீரகம் செல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும்.  சுருக்கங்களின்றி இளமையான சருமத்தை தரும்.
 
* குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும்.
 
* கல்லீரலில் படியும் அதிகபடியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலின் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும்  அதிகமாகும்.