1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (23:53 IST)

வெள்ளெருக்கு செடியின் மருத்துவ பயன்கள்

தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கே மருத்துவத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.
 
 
இலை நஞ்சு நீக்குதல், வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம்-கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களையுடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல், முறைநோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது. பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது.
 
வெள்ளெருக்கம்பூ ஆஸ்துமா, மார்புச்சளி ஆகியவற்றுக்குச் சிறந்தது. குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.  விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.
 
வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.  எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.
 
புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லியிருக்கிறார்கள். சக்தி வாய்ந்த வெள்ளெருக்குச் செடியின் இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.
 
பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துகொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள். 
 
''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் 
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான 
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம் 
உண்ணமுடியுமென ஓது'' 
 
என்கிறது சித்தர்பாடல்.