புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (11:40 IST)

வலி இல்லாமல் மரணித்தார்: ஹாலிவுட் நடிகரின் மனைவி டிவிட்!!

ஸ்டார் வார்ஸ் திரைப்பட நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களை பாராபட்சமின்றி கொன்று வருகிறது. அந்த வகையில் ஸ்டார் வார்ஸ் திரைப்பட நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளார். 
இந்த செய்தியை அவரது மனைவி வெளியிட்டுள்ளார். அதில் அவர் எந்தவித வேதனையும் இன்றி அமைதியாக உயிர் பிரிந்தார் என குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் ஆண்ட்ரூ ஜாக். 
 
ஸ்டார் வார்ஸ் படத்தின் 7, 8 ஆம் பாகங்களில் இவர் நடித்துள்ளது. அதோடு, மென் இன் பிளாக்: இன்டர்நேஷனல், தோர்: ரக்னாரோக், தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் முத்தொகுப்பு மற்றும் இரண்டு அவென்ஜர்ஸ் திரைப்படத்திலும்  பணியாற்றியுள்ளார். இவருக்கு 76 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.