லைகா நிறுவனத்திற்கு அபராதம் - விஷால் டுவீட்
விஷால் மீது வழக்கு தொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஷால் மீதும் அவர் நடித்த சக்ரா படத்தின் மீதும் லைக்கா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது
இந்த தீர்ப்பில் விஷால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி பொய்யான வழக்கை விஷால் மீது தாக்கல் செய்வதற்காக லைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீதி வெல்லும், உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புவேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் சக்ரா திரைப்படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், நீதி மற்றும் உண்மை வெல்லுமென்பதை நான் நம்புகிறேன். மேலும் ஒரு பொய்யான வழக்கை என் மீது வைத்து, மீது குற்றம்சாட்டிய லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் உயர் நீதிமன்றம் அபரதம் விதுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.