1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஜூலை 2015 (12:25 IST)

உடை வடிவமைப்பாளராக திரும்ப வரும் கேட் வின்ஸ்லெட்

இந்த உலகில் அதிகம் பேரால் காதலிக்கப்பட்டவர், கேட் வின்ஸ்லெட்டாகதான் இருப்பார். டைட்டானிக் வெளிவந்த நேரம் அவரை மோகிக்காதவர் இல்லை.
இப்போது கேட் வின்ஸ்லெட் எப்படி இருக்கிறார்?
 
அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அக்டோபர் 22 வரை காத்திருங்கள். அன்று கேட் வின்ஸ்லெட் நடித்த, 'ட்ரெஸ் மேக்கர்' படம் யுஎஸ்ஸில் வெளியாகிறது. அதுவரை பொறுக்க முடியாதவர்கள் ட்ரெய்லரை பார்த்துக் கொள்ளலாம்.
 
ட்ரெஸ் மேக்கர் படம், இதே பெயரில் எழுதப்பட்ட நாவலின் தழுவல். ஆஸ்திரேலியாவை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கிறது. சிறு வயதில், கொலை குற்றம் காரணமாக ஆஸ்திரேலியாவின் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து வெளியேறும் கேட், வளர்ந்து பெரியவள் ஆன பிறகு உடை வடிவமைப்பாளராக சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். அவரது அம்மா உள்பட அனைவரும், நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்கிறார்கள். 
 
தன்னை வெறுப்பவர்கள் மத்தியில் தனது உடை வடிவமைக்கும் திறனை வைத்து எப்படி அவர்களின் மனங்களை வெற்றிக் கொள்கிறார் என்பது கதை. இதன் நடுவில் பழைய கொலை குற்றம் வேறு அவரை தொந்தரவு செய்கிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார்களாம்.
 
படிக்க சுவாரஸியமாக இருக்கிறது. படமும் பார்க்கும்படி இருக்கும் என்று நம்பலாம்.