பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய 1917
பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் எதிர்பார்த்தபடியே 1917, ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் விருதுகளை தட்டி சென்றுள்ளன.
உலகளவில் கவனிக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் வழங்கும் விழா தற்போது நடந்து முடிந்துள்ளது. அனைத்து விருது விழாக்களிலும் ஜோக்கர், 1917 உள்ளிட்ட படங்கள் விருதுகளை வென்று வருகின்றன.
அந்த வகையில் இந்த விருது விழாவில் 1917 திரைப்படம் சிறந்த இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதை வென்றுள்ளது. பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடியே ஜோக்குயின் பீனிக்ஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த அனிமேசன் படமாக “க்ளாஸ்” தேர்வாகியுள்ளது. இதுதவிர மாமல்லபுரம் ஸ்கேட்டிங் சிறுமியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘கமலி’ திரைப்படம் பரிந்துரையில் இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை.
சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் பாங் ஜூனின் ‘பாரசைட்’ விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் 10ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் விழாவிலும் 1917 திரைப்படம் பரவலான விருதுகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.