1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (11:01 IST)

செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏன்....?

Pradosham 2
சிவனை வழிபட எத்தனையோ முக்கியமான தினங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நாளாக கருதப்படுவது பிரதோஷம் ஆகும்.


ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்.

இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பாகும். பிரதோஷ நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ளதாகும். பிரதோஷ வேளையான இந்நேரத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. நினைத்த காரியம் கைகூடும். வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

செவ்வாய் கிழமை சிவ வழிபாடு சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது.

உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து கோவில் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.