January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞசம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
01.01.2025 அன்று புதன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூர்யன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18.01.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28.01.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். மங்களகாரகன் செவ்வாய் ராசியில் இருப்பதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும்.
குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. தொழில்துறையாளர்களுக்கு மாதம் முழுக்கவே பணி இருக்கும். வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள். கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு பொருளாதார வசதிகளும் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். மாணவமணிகளுக்கு கேளிக்கைகளில் ஈடுபட மனம் அலைபாயும். எச்சரிக்கை அவசியம்.
உத்திரம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.
சித்திரை:
இந்த மாதம் கல்வியில் பின் தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும். எல்லாக் காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18