திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:57 IST)

பூஜைக்கு எந்தெந்த மலர்கள் உகந்தது?

Flower
சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டுமென்றால் மலர்கள் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தில் எந்தெந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் எந்தெந்த மலர்கள் பூஜைக்கு உகந்தது என்பதை பார்ப்போம். 
 
பூஜைக்கு கண்டிப்பாக துலுக்க சாமந்திப் பூவை உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்வதுண்டு. மேலும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் மலர்கள்  அன்றே மலர்ந்த மலர்களாக இருக்க வேண்டும் என்றும்  ஏற்கனவே இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும்  முல்லை  வில்வம்  ஆகியவை சிவ பூஜைக்கு மிகவும் உகந்தது என்றும் துளசி செண்பகம் தாமரை மரிக்கொழுந்து மருதாணி ஆகியவைகளின் இலைகளும் பூஜைக்கு உகந்தது என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.  
 
மேலும் ஊமத்தை மலர், ஜாதி மலர், கதம்பமலர் ஆகியவற்றை இரவு பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அர்த்தராத்திரி பூஜைக்கு தாழம்பூவை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.  
 
மேலும் பூஜைக்கு ஒரு சில மலர்கள் உகந்ததாக இல்லை கருதப்பட்டாலும் அவை  அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தலாம் என்றும் ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran