1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (23:44 IST)

மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்ய நாம் செய்ய வேண்டியவை....!!

மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். 
 
வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை  பயன்படுத்தப்படுகின்றன. 
 
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். 
 
வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம்  செய்ய வேண்டும். 
 
வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விடவேண்டும்.
 
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமிக்கு மஞ்சள்  நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
 
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்  நலம் உண்டாகும்.