வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (14:58 IST)

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சி

கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சியினை முன்னிட்டு மஞ்சளில் மகாலெட்சுமி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்


கரூர் ஜவஹர் பஜாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அஷ்ட ஐஸ்வர்யமும் பொங்கவும், இல்லத்தில் எப்போதும் நிம்மதி மற்றும் செல்வச்செழிப்பு இருக்கவும், ஆலயத்தில் மஞ்சளில் மகாலெட்சுமி அம்மன் செய்யப்பட்டு, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க, முழுக்க மஞ்சளில் ஆன அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, வாசவி மகிளா மண்டலியினர் மற்றும் பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு காலை முதல் இரவு வரை அம்மனை வணங்கி அருள் பெற்றனர். இதே போல, வாசவி மகிளா மண்டலி நிர்வாகியினர் வீட்டிலும், முக்கிய கோயில்களிலும் இதே போல அம்மன் அமைத்தும், காய்கறிகளால் அனைத்து வித செல்வங்களும் கிடைத்து, குடும்ப அமைதி கிடைக்க மஞ்சளினால் ஆன வரலெட்சுமி மஹா லெட்சுமி அமைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டது.

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்