செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (20:54 IST)

திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு!

tirupathi
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதை அடுத்து பக்தர்கள் 20 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வைகுந்தம் காம்ப்ளக்ஸில் காத்திருப்பதாகவும் இதனால் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தற்போது விடுமுறை தினங்கள் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாய் வருவது தேவசான ஊழியர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக ஏழுமலையானை தரிசனம் செய்த செய்வதற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து திருப்பதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன.
 
Edited by Mahendran