செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (16:41 IST)

தென் திருமுல்லைவாயல்: முக்தியும் மோட்சமும் கொடுக்கும் கோயில்..!

சீர்காழி அருகே உள்ள தென் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள கோயிலில் சென்று வணங்கினால் முக்தி மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

சீர்காழி அருகில் உள்ள தென் திருமுல்லைவாயில் என்ற கோயில் தேவாரப் பாடல் இடம்பெற்ற தலங்களில் ஒன்றாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததாகவும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் இந்த ஆலயத்தைப் பற்றி தேவாரம் பாடி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள கிணற்றில் கங்கை நீர் ஊற்றெடுப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. சூரிய கிரகண நாள், அமாவாசை ஆகிய தினங்களில் இந்த தலத்திற்கு வந்து இறைவனையும் முன்னோர்களையும் நினைத்து வழிபட்டால் மோட்சம் மற்றும் முக்தி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, செல்வ செழிப்பு மற்றும் நிம்மதியும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை ஓரத்தில் தென் திருமுல்லைவாயில் கோயில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



Edited by Mahendran